வியாழன், 16 ஜூலை, 2009

ஆக.6, 7 தேதிகளில் வங்கி ஊழியர் ஸ்டிரைக்!


ஊதிய உயர்வு மறு சீரமைப்பு கோரிக்கையை வலியுறுத்தி ஐக்கிய வங்கிப் பணியாளர் யூனியன் நாடு தழுவிய இரண்டு நாள் வங்கி ஊழியர் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வருகிற ஆகஸ்ட் 6 மற்றும் 7-ம் தேதிகளில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும், யூனியனில் உள்ள 950000 பணியாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

இதுகுறித்து யூனியன் அமைப்பாளர் வெங்கடாச்சலம் கூறியிருப்பதாவது:

வங்கிப் பணியாளர்களின் சம்பள திருத்தக் கோரிக்கைகளை மத்திய அரசும், இந்திய வங்கிகள் சங்கமும் புறக்கணித்ததன் மூலம், இந்த நாடு தழுவிய போராட்டத்துக்கு எங்களை தள்ளிவிட்டுள்ளனர். 2007-ம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ள கோரிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாலேயே வேலை நிறுத்தம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளோம். கடந்த ஜூன் 9-ம் தேதியன்று நடத்திய பேச்சுக்களின்போது 17.5 சதவிகிதம் ஊதிய உயர்வு தர ஒப்புக் கொண்ட சங்கம், பின்னர் திடீரென 15 சதவிகிதம்தான் தரமுடியும் என பின் வாங்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம், என்றார்.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin