சனி, 18 ஜூலை, 2009

காயல்பட்டினத்தில் ஜூலை 25-ல் புஹாரி ஷரிப்

காயல்பட்டினம் புனித மஜ்லிஸல் புஹாரி ஷரீபின் 82-ம் ஆண்டு விழா கடந்த மாதம் 25-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒரு மாதம் நடைபெறும் இந் நிகழ்ச்சியில் நிறைவுநாளன்று (ஜூலை 25) காலை 10.30-க்கு உலக அமைதி வேண்டியும், மழை வளம், நாட்டின் சுபிட்சம் வேண்டியும் புனித அபூர்வ துஆ என்ற பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெறும்.

இதையொட்டி, தினசரி காலை மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந் நிகழ்ச்சி இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

நிகழ்ச்சியில் மஹ்ழரா அரபிக் கல்லூரி பேராசிரியர் முஹம்மத் அய்ஃபர் பாக்கவீ மார்க்க சொற்பொழிவாற்றினார்.

மத்ரஸத்துல் ஹாமிதிய்யா பேராசிரியர் ஏ.சுல்தான் அப்துல் காதிர் மஹான் ஸôம்ஷிகாபுத்தீன் வாழ்க்கை சுருக்கத்தை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பு வைபவ கமிட்டி எம்.ஏ.செய்யது முஹம்மது, கே.எஸ்.கிதுரு முஹம்மது, எம்.ஐ.டெய்யிது இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin