சனி, 8 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம்: தேமுதிக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள புதுக்குடியில் தேமுதிக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்குடி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் எம்பி ஆஸ்டின் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மாவட்ட செயலர் கோமதி கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட கேப்டன் மன்ற செயலர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலர் தசரதபாண்டியன் வரவரவேற்றார்.

பேராசிரியர் ரவீந்திரன், சீனிவாசராகவன், மாவட்ட துணைச் செயலர் ஏ.வி.முருகேசன், திருநெல்வேலி மாநகர மாவட்ட அவைத் தலைவர் தர்மலிங்கம், செயலர் கணேஷ்குமார் ஆதித்தன், ஸ்ரீவைகுண்டம் நகர செயலர் சின்னத்தம்பி, பெருங்குளம் நகர செயலர் அய்யாக்குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin