ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்ட மு. மாரிமுத்து வெற்றிபெற்றார்
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் கூட்ட அரங்கில் தேர்தல் அலுவலர் மணி முன்னிலையில் நடந்தது. மொத்தம் 18 வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். துணை தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் மு.மாரிமுத்து மற்றும் தி.மு.க. சார்பில் பெ.தங்கவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாரிமுத்து 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெ.தங்கவேல் தோல்வியடைந்தார்.
வெற்றி பெற்ற மு.மாரிமுத்துவுக்கு பேரூராட்சித் தலைவர் பி. அருணாசலம், நகர அதிமுக செயலர் பால்துரை, ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் சிவராமலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக