ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அ.முத்துலட்சுமி, துணைத் தலைவராக சு.வசந்தா ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மொத்தம் உள்ள 14 வார்டு உறுப்பினர்களில், அதிமுக சார்பில் 10 பேரும், திமுக சார்பில் ஒருவரும், தேமுதிக சார்பில் ஒருவரும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றிபெற்றனர்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர் தேர்தல், தேர்தல் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் 13-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.முத்துலட்சுமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் 9-வது வார்டு உறுப்பினர் சு. வசந்தாவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் அதிமுக ஒன்றியச் செயலர் வெ.ஆறுமுகநயினார், பெருங்குளம் நகரச் செயலர் செல்லத்துரை, திருப்பாற்கடல், ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் சிவராமலிங்கம் வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக