சென்னையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மெட்ராஸ் தினம் (Madras Day), மெட்ராஸ் வாரமாக (Madras Week) அடுத்த மாதம் (ஆகஸ்ட்) கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 22, 1639ஆம் ஆண்டு சென்னை உருவான தினத்தைக் குறிக்கும் வகையில், கொண்டாடப்படும் இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
என்றாலும் அடுத்த மாதம் 15ஆம் தேதியன்றே கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.
சிறிய அளவில் தொடங்கப்பட்டு, தற்போது மிகப்பெரிய அளவில் மெட்ரால் வாரத்திற்கு வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த சென்னை வரலாற்றை நோக்கிய ஆர்வம் கொண்ட அனைவரும், இந்த மெட்ராஸ் வீக் கொண்டாட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.
இதில் பங்கேற்பது தன்னார்வத்தின் அடிப்படையிலானது என்றும், குறிப்பிட்ட வாரத்தில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தலும் இதில் அடங்கும்.
இதன் ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் பங்களிப்பை ஊக்குவிப்பதுடன், அவை பற்றிய விளம்பரப்படுத்துதல், அரங்கங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றுக்கு உதவுவார்கள்.
முதல் ஆண்டில் 15 நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், கடந்தாண்டில் 75 நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பேச்சுப்போட்டி, வினாடி-வினா, கண்காட்சிகள், தனித்திறமைகளை வெளிப்படுத்துதல் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். இந்த ஆண்டு மேலும் அதிக நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரால் மியூசிங்ஸ் தனது ஆலோசனையை வழங்கி வருகிறது.
நிகழ்ச்சிகள் பற்றி கேட்டறிய விரும்புவோர் editor@madrasmusings.com என்ற மின்னஞ்சல் மூலமோ
சென்னை ஹெரிடேஜ், 5, பட்டாட் டவர், 30, வெஸ்ட்காட் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600 014 என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் சென்னையில் உள்ள முக்கிய ஹோட்டல்களான தாஜ் கோரமண்டல், வெல்கம் குழும பார்க் ஷெரட்டன், தாஜ் கன்னிமரா, தி பார்க், தி கிரீன் பார்க், தி ரெய்ன் ட்ரீ ஆகியவை தங்களின் முக்கிய பங்களிப்பை தர தயாராகி வருகின்றன.
உணவு திருவிழாக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக