செவ்வாய், 2 ஜூன், 2009

அரசு உதவித் தொகையுடன் உயர்கல்வி பயில மாணவர்கள் தேர்வு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழகத்தில் உள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் அரசு உதவித் தொகையுடன் உயர் கல்வி பயில மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சிறந்த பள்ளிகளில் அரசு கல்வி உதவித் தொகையுடன் கல்வி பயில, 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சீர்மரபினைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஓவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் படித்து 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த 3 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள், 2 மாணவிகள் என மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த மாணவ-மாணவியர்கள் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற அரசு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் உதவி பெறும் மாணவ, மாணவியர்களின் பெற்றௌரின் வருமானம் வருடத்திற்கு ரூ.1 லட்சத்திற்குள் மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் ஓரு மாணவருக்கு ஆண்டிற்கு ரூ.28 ஆயிரத்திற்கு மிகாமல் 2 ஆண்டுகளுக்கு ரூ.56 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தகுதியுடைய மாணவ- மாணவியர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நன்றி : வீர.ப்ரியா, தூத்துக்குடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin