புதன், 3 ஜூன், 2009

குற்றாலத்தில் குளிக்க சென்ற காயல்பட்டினம் மாணவர் தேனீக்கள் கடித்து பரிதாப மரணம்


குற்றாலம் அருவியில் குளிக்க சென்ற காயல்பட்டினம் மாணவர் தேனீக்கல் கடித்து பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், மரைக்காப்பள்ளி தெருவைச் சேர்ந்த நஜீப் என்பவரது மகன் மஹ்மூது நெய்னா (வயது 19). இவர் தனது நண்பர்கள் 3பேருடன் குற்றாலத்திற்கு சென்றுள்ளார். அங்கு செண்பகாதேவி அருவிக்கு மேல் உள்ள தேனருவிக்கு சென்றுள்ளார். செல்லும் வழயில் தேனீக்கள் கூடு இருந்துள்ளது. அதனை கடந்து செல்லும்போது தேனீக்கள் களைந்து மஹ்மூது மற்றும் அவரது நண்பர்களை விரட்டியுள்ளது.

அப்பொழுது தேனீக்களிடம் இருந்து தப்ப நண்பர்கள் மலையின் கீழ்பக்கம் ஓடியுள்ளனர். மஹ்மூது ஒரு குகைக்குள் தஞ்சம் அடந்துள்ளார். ஆனால் தேனீக்கள் மொத்தமாக வந்து மஹ்மூது நெய்னாவை கொட்டியுள்ளது. இதனால் காயமடைந்த மஹ்மூது மயக்கமடைந்தார்.
இந்நிலையில் கீழே வந்த நண்பர்கள் தென்காசியில் உள்ள தமுமுகவினரை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் செண்பகாதேவி மேல் பகுதிக்கு சென்று கயிறு கட்டி மஹ்மூது நெய்னாவை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நெய்னா இறந்துள்ளார்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin