
துபாயில் கோடை விழா துவங்கியுள்ளது. இந்த விழா ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடைபெறும்
துபாயில் கோடைவிழா (http://www.mydsf.com) கடந்த 1998ம் ஆண்டு முதல் வருடந்தோறும் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகவும், பள்ளி விடுமுறை காலத்தில் மாணாக்கர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் இருக்கும் விதமாகவும் இக்கோடை விழா நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டுக்கான கோடை விழா வியாழக்கிழமை துவங்கியது. இதனையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதனையொட்டி ஏர்போர்ட் எக்ஸ்போவில் மாதேஸ் பன் சிட்டி (Modhesh Fun City ) என்ற சிறப்பு இடம் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு ஷாப்பிங் சென்டர்களிலும் இதனையொட்டி சிறப்பு நிகழ்வுகள், தள்ளுபடி விற்பனை ஆகியவை நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக