செவ்வாய், 12 மே, 2009

மனைவியை அறையலாம்!-சவூதியில் இப்படி ஒரு தீர்ப்பு

ரியாத்: ஊதாரித்தனமாக செலவு செய்யும் மனைவியின் கன்னத்தில் கணவன் அறைவதில் எந்த தவறும் இல்லை என சவூதி அரேபியாவை சேர்ந்த நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கு அங்குள்ள பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.குடும்ப வன்முறை பிரச்சினை தொடர்பான வழக்கு ஒன்றில் ஹமத்-அல்-ரசின் என்ற நீதிபதி வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளார். அவர் தனது தீர்ப்பில், கணவன் மனைவியிடம் 1200 சவூதி ரியால் சம்பளத்தை கொண்டு வந்து கொடுக்கிறான். ஆனால், மனைவி அதில் 900 சவூதி ரியாலை தனக்கு அங்கி வாங்குவதற்கு மட்டும் பயன்படுத்தி ஊதாரியாக நடந்து கொள்கிறாள்.

இந்நிலையில் கணவன் ஆத்திரப்பட்டு அவளை அடித்தாள். அடி வாங்குவதற்கு அவள் தகுதியானவள் என தீர்ப்பில் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், குடும்ப வன்முறைக்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் பங்குள்ளது. ஆனால், இதில் யாரும் பெண்கள் மீது இருக்கும் தவறை பார்ப்பதில்லை. பெண்கள் மோசமாக நடந்து கொள்வதாலும், கணவனை இழிவான சொற்களால் பேசுவதும் குடும்ப வன்முறை தூண்டுவதற்கு சில காரணங்களாக இருக்கின்றன என்றார்.

இந்த தீர்ப்பினால் நீதிமன்ற வளாகத்துக்கு பார்வையாளர்களாக வந்திருந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் நீதிபதி அல்-ரசினின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து பெண்கள் உரிமை அமைப்பை சேர்ந்த அல்-குவைதர் என்ற பெண் கூறுகையில், இப்படி தான் சவூதியில் இருக்கும் பெண்களை ஆண்கள் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இதை யாரும் சொல்லி தருவதில்லை. ஆனால், வளர்ப்பிலே ஆண்கள் மத்தியில் பெண்கள் மனிதர்களை விட தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை விதைத்து விடுகின்றனர்.

இந்த தீர்ப்பு எந்த அதிர்ச்சியை எனக்கு ஏற்படுத்தவில்லை. அந்த நீதிபதியும் ஆணாதிக்க சூழலில் தான் வளர்ந்திருப்பார் என்றார் அவர்.

நம்ம ஊரில் கணவனை மனைவி அறைந்தால் செய்தி. ஆனால் அதுவே சவூதியில் தலைகீழ் போலும்

தகவல் : தட்ஸ்தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin