வெள்ளி, 15 மே, 2009

மலேசியாவில் கணவரைக் கொலை செய்த இந்தியப் பெண்ணுக்கு தூக்குத் தண்டனை

கணவரைக் கொலை செய்து அவரது உடலை ரகசியமாக வீட்டுத்தோட்டத்தில் புதைத்த குற்றத்திற்காக இந்தியப் பெண்ணுக்கு தூக்குத் தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரியாஸ் அகமது மரூஃப். இவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவியும், தம்பியும் படுக்கையறையில் கொலை செய்து, வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் ரகசியமாக புதைத்து விட்டதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில், மொத்தம் 18 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முடிவில் மலேசிய உயர் நீதிமன்ற நீதிபதி சஹராஹ் இப்ராஹிம் வழங்கிய தீர்ப்பில், ரியாஸ் அகமது கொலையில், அவரது மனைவி ஷாமின் பானோ முகமது ஃபரூக், தம்பி ஜாவீத் அக்தர் அப்துல் வஹீத் ஆகியோருக்கு தொடர்புள்ளது. எனவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தீர்ப்பைக் கேட்டவுடன் கண்ணீர் விட்டுக் கதறிய ஷாமின் பானோ, தனக்கும், கணவர் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், ஜாவீத் அக்தர் மற்றும் அவரது நண்பர்கள் சிலரே தனது கணவரை கொலை செய்து தோட்டத்தில் புதைத்ததாகவும் கூறினார்.

தகவல் : வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin