செவ்வாய், 12 மே, 2009

விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி?

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் பல தாங்கள் வழங்கும் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் விஸ்டா தொகுப்பினைப் பதித்தே வழங்குகின்றன. விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் பழக்கப்பட்டவர்கள், தங்களிடம் உள்ள தனிப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகள் விஸ்டாவில் சரியாக வருவதில்லை என உணர்ந்த பலர் எக்ஸ்பி கேட்டால் அந்த நிறுவனங்கள் தற்போது விஸ்டா தான் பதிந்து தர முடியும். அதற்கான உரிமம் தான் தற்போது அமலில் உள்ளது என்று கூறி மறுத்துவிடுகிறார்கள்.

நாம் ஏற்கனவே விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை கட்டணம் செலுத்தி பழைய கம்ப்யூட்டருக்கென வாங்கி இருந்தாலும் அதனைப் புதிய கம்ப்யூட்டரில் பதிந்து செயல்படுத்த முடியவில்லை. மேலும் புதிய கம்ப்யூட்டருக்கான வாரண்டியின் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்றால் அதில் இருக்கும் விஸ்டாவினை நீக்கிவிட்டால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்றும் கம்ப்யூட்டரை வழங்கிய நிறுவனங்கள் கூறி விடுகின்றன. இந்நிலையில் விஸ்டா இருக்கும் கம்ப்யூட்டர்களிலேயே எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் பதிந்து செயல்படுவதற்கான வழிகளை இங்கு காண்போம்.

விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீதே எக்ஸ்பி சிஸ்டத்தினையும் பதிய முயற்சித்தால் பின் விஸ்டா இயங்காமல் போய்விடும். அதன் bootloader மீது தான் புதிய இயக்கம் அமர்ந்துவிடுவதால் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும் விஸ்டாவின் பூட் பைலை எக்ஸ்பி பூட் பைலை எடிட் செய்வது போல அவ்வளவு எளிதாக இயக்க முடிவதில்லை. எனவே ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்கும் வகையில் டூயல் பூட் என்ற அடிப்படையில் விஸ்டா இருக்கும்போதே எக்ஸ்பியையும் பதிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதுதான் இதற்கு உதவிடும் புரோகிராம் ஒன்று இணையத்தில் இருப்பது தெரிய வந்தது. அந்த புரோகிராமின் பெயர் VistaBootPro. இந்த புரோகிராமினை www.vistabootpro.org என்ற முகவரியில் உள்ள வெப்சைட்டில் இருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.

தகவலுக்கு நன்றி : S.M.S. ஹமீது, துபாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin