ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

தென் மாவட்டங்களில் பறந்து பறந்து பிரசாரம் செய்யப்போகிறார் ஜெ.,

.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பறந்து பறந்து பிரசாரம் செய்யப்போகிறார். அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதா இந்த முறை பொதுக்கூட்டங்கள் மூலமாகவே பிரசாரம் மேற்கொள்கிறார். வழக்கமாக ஜெ., கிராமங்கள்தோறும் வேனில் சென்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டு இரவில் பெரிய நகரம் ஒன்றில் தங்குவது போல திட்டமிடப்படும். ஆனால் தற்போது வேன் பிரசாரம் இல்லாமல் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார். வரும் 18ம்தேதி காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் ஜெ., அங்கிருந்து ஹெலிகாப்டரில் நெல்லை வருகிறார். நெல்லை டவுன் வாகையடிமுனை பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பேசுகிறார். பிற்பகலில் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார்.

அங்கு இரவு பொதுக்கூட்டத்தில் மா.கம்யூ.,பெல்லார்மினை ஆதரித்து பேசுகிறார். இரவில் தங்கும் ஜெ.,19ம் தேதி காலையில் ஹெலிகாப்டரில் சங்கரன்கோவில் வருகிறார். பொதுக்கூட்டத்தில் தென்காசி(தனி) இந்திய கம்யூ.,வேட்பாளர் லிங்கத்தை ஆதரித்து பேசுகிறார். தொடர்ந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி செல்கிறார். மாலையில் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.,வேட்பாளர் சிந்தியாவை ஆதரித்துபேசுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin