வெள்ளி, 10 ஏப்ரல், 2009

வங்க கடலில் புயல் சின்னம்:தூத்துக்குடி, நெல்லையில் விடிய விடிய மழை


தமிழ்நாட்டின் தென் கிழக்கில் இலங்கைக்கு அருகே வங்க கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது மேலும் தீவிரம் அடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
தென் மாவட்டங்களில் அதிகபட்சமாக பூதப்பாண்டியில் 105.6 மி.மீ. மழை பெய்தது. பேச்சிப் பாறையில் 32 மி.மீட்டர் மழையும், பெருஞ்சாணியில் 73 மி.மீ. மழையும், நாகர்கோவிலில் 74.5 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

புயல் சின்னம் காரணமாக வட மாவட்டங்களின் உள் பகுதியிலும், கடலோர மாவட்டங்ளிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தென் கிழக்கில் இலங்கைக்கு அருகே வங்க கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது மேலும் தீவிரம் அடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

இதனால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நேற்று நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் இரவு 10 மணி முதல் மழை பெய்ததால் பல இடங்களில் மழை நீர் பெருக் கெடுத்து ஓடியது. பலத்த மழை காரணமாக இரவில் மின் வினியோகமும் துண் டிக்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் அதிகபட்சமாக பூதப்பாண்டியில் 105.6 மி.மீ. மழை பெய்தது. பேச்சிப் பாறையில் 32 மி.மீட்டர் மழையும், பெருஞ்சாணியில் 73 மி.மீ. மழையும், நாகர்கோவிலில் 74.5 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin