வெள்ளி, 10 ஏப்ரல், 2009

அ.தி.மு.க.வில் இருந்து எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. 14-ந்தேதி ராஜினாமா


கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் நடிகர் எஸ்.வி. சேகர். அ.தி.மு.க.வில் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் எஸ்.வி. சேகர் அக்கட்சியில் இருந்த விலகுவார் என்று கூறப்படுகிறது. கடந்த 3 மாதமாக இந்த நிலை நீடித்தது. ஆனால் எஸ்.வி. சேகர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தென்னந்திய பிராமண சங்க கூட்டமைப்பு (பெபாஸ்) என்ற அமைப்பை தொடங்கினார்.

எனவே அவர் அ.தி.மு.க.வில் இருந்து விரைவில் விலகுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் வரும் 14-ந்தேதி அ.தி.மு.க.வில் தொடர்வதாக வேண்டாமா? என்பதில் இறுதி முடிவை எடுக்க உள்ளதாக திருச்சியில் கூறினார். திருச்சியில் தென்னிந்திய பிராமண சங்க கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் (பெபாஸ்) கூட்டம் நடந்தது.

இச்சங்கத்தின் நிறுவனரான எஸ்.வி.சேகர் நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது:-

தமிழகத்தில் பிராமணர் 10 சதவீதம் உள்ளனர். கல்வி வேலை வாய்ப்புப் 7 சதவீதம் இடஓதுக்கீடு கேட்டு முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்து விலியுறுத்தி உள்ளேன். அவரும் பரிசீலிப்பதாக கூறினார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள்தால் இது பற்றி எதுவும் அறிவிக்க முடியத நிலை தேர்தல் முடிந்த பிறகு அறிவிப்பு வருகிறதா என பார்ப்போம். 50 வருடம் காத்திருந்தோம் இன்னும் சில காலம் காத்திருப்போமே!

தமிழகத்தல் 90 சதவீத பிராமணர்கள் ஏழைகளாக உள்ளனர். பிராமணர்களின் ஓட்டுக்கள் கட்சிகளுக்கு தேவை. ஆனால் பிராமணர்கள் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். அப்படி கருதும் எந்த கட்சியும் அரசும் பலனை அறுவடை செய்தே ஆகவேண்டும். நான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக தொடர்வதா வேண்டாமா? என்பதை வரும் 14-ந்தேதி அறிவிப்பேன்.
இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin