வெள்ளி, 10 ஏப்ரல், 2009

நேருக்கு நேர்..10 தொகுதிகளில் திமுக Vs அதிமுக

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் 10 தொகுதிகளில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதும் தொகுதிகளில்தான் தேர்தல் பிரசாரமும் சரி, வாக்குப் பதிவும் சரி படு விறுவிறுப்பாக இருக்கும்.

இந்தத் தொகுதிகளில்தான் ஏகப்பட்ட கலாட்டாக்களும் அரங்கேறும். போட்டி போட்டு பணம் கொடுப்பதும் அமர்க்களமாக இருக்கும்.வரும் லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளும் 10 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணிக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதையே இது காட்டுகிறது. மேலும், சில தொகுதிகளில் ஒரு கட்சியை இன்னொரு கட்சி சந்திக்க பயந்தும் கூட அவற்றை கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளி விட்டுள்ளனர்.

மொத்தத்தில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் இரு கட்சிகளும் நேரடியாக மோதும் தொகுதிகள்.

1. தென்சென்னை- ஆர்.எஸ்.பாரதி (திமுக), சிட்லபாக்கம் ராஜேந்திரன் (அதிமுக)

2. மத்திய சென்னை - தயாநிதி மாறன் (திமுக), நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் (அதிமுக).

3. திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன் (திமுக), ஆர்.ராஜன் (அதிமுக)

4. கிருஷ்ணகிரி - சுகவனம் (திமுக), நஜ்ஜேகவுடா (அதிமுக)

5. பெரம்பலூர் - நெப்போலியன் (திமுக), மருதைராஜ் (அதிமுக)

6. கரூர் - கே.சி.பழனிசாமி (திமுக), மு.தம்பிதுரை (அதிமுக)

7. நாமக்கல் - காந்திசெல்வன் (திமுக), வைரம் தமிழரசி (அதிமுக)

8. பொள்ளாச்சி - சண்முக சுந்தரம் (திமுக), கே.சுகுமார் (அதிமுக).

9. ராமநாதபுரம்- ஜெ.கே.ரித்தீஷ் (திமுக), சத்திய மூர்த்தி (அதிமுக)

10. தூத்துக்குடி- ஆர்.எஸ் ஜெயதுரை (திமுக), டாக்டர் சிந்தியா பாண்டியன் (அதிமுக).

தலைநகர் சென்னையில் மொத்தம் 3 தொகுதிகள் உள்ளன. இதில் மூன்றிலும் திமுக போட்டியிடுகிறது.

ஆனால் அதிமுக வட சென்னையை இந்திய கம்யூனிஸ்டுக்குக் கொடுத்து விட்டு மற்ற இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin