சனி, 11 ஏப்ரல், 2009

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 27 வழக்கு பதிவு

பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது தேர்தல் ஆணையம் கடும் விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி மாநகர-நகர பகுதிகளில் தனியார் இடங்களிலோ, பொது இடங்களிலோ எந்தவித விளம்பரமும் செய்யக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. கிராம புறங்களில் தனியார் சுவர்களில் மட்டும் அதன் உரிமையாளர்களிடம் அனுமதிபெற்று விளம்பரம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் டி.ஐ.ஜி. கண்ணப்பன் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் மேற்பார்வையில் விதிமுறைகளை மீறி தேர்தல் விளம்பரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 6 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகப்படியாக தி.மு.க. மீது 5 வழக்குகளும், தே.மு.தி.க. மீது 5 வழக்குகளும், மனிதநீதி பாசறை மீது 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin