திங்கள், 13 ஏப்ரல், 2009

இன்போஸிஸ் நிறுவனத்தில் 2100 பேர் அதிரடி நீக்கம்!


பெங்களூர்: உலகில் குறைந்த அளவு பணியாளர்களை நீக்கும் நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸை போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்ட அடுத்த நாளே, அந்நிறுவனம் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்களை அதிரடியாக நீக்கியுள்ளது!

வேலைத் திறன் சரியில்லை என்று கூறி இந்தியாவில் மட்டும் 2100 பேரை நீக்கியுள்ளது இன்போஸிஸ்.

இதுகுறித்து இன்போசிஸ்ஸின் மனித வள அதிகாரி டிவி மோகன்தாஸ் பய் கூறுகையில், இது ஒரு வழக்கமான செயல்முறைதான். ஆண்டுதோறும் பணியாளர்களின் வேலைத் திறன் ஆராயப்படும். இதில் செயல் திறன் இல்லாத பணியாளர்கள் என்று கண்டறியப்படும் அனைவரும் நீக்கப்படுவது சாதாரண நடைமுறையே என்றார்.

தேவையில்லாத பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பவும், அளவுக்கு அதிகமான பணியாளர்களைக் குறைக்கவும் இன்போஸிஸ் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் டெக்னிக் இது என்று பணியிழந்த ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த காலாண்டில் 25000 புதிய எஞ்ஜினீயர்களை பணியில் நியமிப்பதாக இன்போஸிஸ் அறிவித்தது. பின்னர் மேலும் 2000 பேரை புதிதாக வேலைக்கு எடுப்பதாகவும் அவர்களுக்கு நியமன உத்தரவு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறியது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin