திங்கள், 4 ஏப்ரல், 2011

கிரிக்கெட் உலக சாம்பியனாக வரலாறு படைத்ததுடன் புதிய உலக சாதனையும் படைத்துள்ளது நமது இந்தியா


10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது நமது இந்தியா.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது



1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து இப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.

இந்த முறை கோப்பையை வென்றதன் மூலம் கோப்பையை நடத்திய நாடுகள் அதன் சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி புதிய சாதனைப் படைத்துள்ளது



இந்திய அணியின் வெற்றி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், உரக்கக் குரல் எழுப்பியும் கொண்டாடினர். 1983-ல் இந்தியா கோப்பையை வென்றபோது ஏற்பட்ட அதே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் இந்தியா முழுவதும் காண முடிந்தது.

சனி, 2 ஏப்ரல், 2011

கிரிக்கெட் உலக கோப்பை 2011 நமக்கே !

இந்த 2011 கிரிக்கெட் உலக கோப்பை நமக்கு தான் என்று நினைக்க தோன்றுகிறது. ஏன் என்றால் கடந்த 1983 ஆம் வருட காலண்டரும் 2011 ஆம் வருட காலண்டரும் ஒரே மாதிரி உள்ளத்தால் இது கூட ஒரு காரணம் என்று சொல்லலாம்.




ஆனால் எல்லாம் வல்ல இறைவனின் நாட்டம் என்ன? என்பதை யாரும் அறியாத ஒன்று என்பது தெளிவான விஷயம் ஆகும்.

செவ்வாய், 29 மார்ச், 2011

ஸ்ரீவைகுண்டத்தில் "அம்மா" என்ற முத்திரையிடப்பட்ட ரூ.100 நேட்டால் பரபரப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் அம்மா என்ற முத்திரையிடப்பட்ட ரூ.100 வினியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிமுறைகளால் தேர்தல் வேலைகள் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக நடக்கிறது. மேலும் வர்த்தக பிரமுகர்கள் பணம் கொண்டு செல்வது கூட பறக்கும் படையினரால் தடுக்கப்பட்டு விட்டது. பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் வாகன சோதனை கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் அம்மா என்று ரப்பர் ஸ்டாம்பி்ல் முத்திரை குத்தப்பட்ட ரூ.100 நோட்டுகள் பல்வேறு தரப்பினரிடம் புழக்கத்தில் உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை அதிகமுவினரே இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக அம்மா என்ற அடையாளத்தை முத்திரையிட்டு வினியோத்தார்களா, அல்லது போலீசையும், தேர்தல் ஆணையத்தையும் திசை திருப்ப யாரேனும் செய்தார்களா என்பது தெரியவில்லை.

இந்த நோட்டை வினியோகித்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 28 மார்ச், 2011

வஃபாத்து செய்தி

வஃபாத்து செய்தி
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

நமது ஊரில் பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவை சேர்ந்த  ஜனாப் மீரான் முஹைதீன் (பாபு சார் )இன்று காலை காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்வோம்.

ஞாயிறு, 27 மார்ச், 2011

மிக முக்கியமான தகவல்கள்

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள். 


2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.


3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.


4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.


5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.


7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!


அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்
**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.


8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!


9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/


10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

11) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது. 

மேலும் விபரங்களுக்கு வகை : புற்றுநோய் 
முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754044-24911526044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்




தகவல் உதவி :மின்னஞ்சல் வழியாக கிடைத்த தகவல் 









வெள்ளி, 25 மார்ச், 2011

ஸ்ரீவையில் நேற்று அதிமுக.வேட்பாளர் சண்முகநாதன் மனுதாக்கல் செய்தார்

ஸ்ரீவைகுண்டம் சட்டசபை அதிமுக தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளருமான சண்முகநாதன் அறிவிக்கப்பட்டார்.


இதையொட்டி அவர் நேற்று ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

கூட்டணி கட்சிகள் தொண்டர்களோடு ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஊர்வலமாக சென்று ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரும் தேர்தல் அதிகாரியுமான வசந்தாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்

ஒன்றிய கழக செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், வக்கீல் பிரிவு சேகர், மாவட்ட பஞ்.தலைவர் சின்னதுரை, பெருங்குளம் நகர செயலாளர் செல்லதுரை மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வியாழன், 17 மார்ச், 2011

ஸ்ரீவைகுண்டம் அருகே பறக்கும் படை மடக்கி பிடித்த ரூ. 17 லட்சம்.

த‌மிழக‌ம் முழுவது‌ம் வாகன சோதனை‌ காவ‌ல்துறை‌ செ‌ய்து‌ வருகிறது. அதை போல் ஸ்ரீவைகுண்டம் தொகுதி பறக்கும் படை வட்டாட்சியர் சங்கரநாராயணன் தலைமையில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மாரியப்பன், முத்தையா உள்ளிட்ட போலீஸார் ஸ்ரீவை பகுதிலும் செக் போஸ்ட் அமைத்து வாகன சோதனை செய்து வருகின்றனர்.



பேட்மாநகரம் செக் போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த அம்பாசிடர் காரில் ரூ.17 லட்சம் கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில் அப்பணம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பட்டு காஸ் ஏஜென்சீஸ் மேலாளர் தூத்துக்குடி மெர்க்கன்டைல் வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. பின்னர் முறையான கணக்குகள் காண்பிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டது

LinkWithin

Blog Widget by LinkWithin