அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
ஸ்ரீவையில் நாளை சட்டமன்ற தேர்தலா? என அடுத்த ஆண்டு தானே சட்டமன்ற தேர்தல் என்று நீங்கள் நினைப்பது உண்மை. ஆனால் இது நமது ஊர் முதவிலுல் ஹைய்ராத் மஜ்லிஸில் பொது தேர்தல் நாளை ( 08 -08 -2010 ) காலையில் 10.00 மணி அளவில் நடக்க இருக்கிறது. நாளையாவது நடக்குமா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்கிறது.
நமது ஊரை ஏன் இப்படி கிண்டலாக எழுதி இருக்கிறாக்கள் என்று நினைக்க வேண்டாம். மிக மிக வருத்தத்துடன் எழுதுகிறோம்
சட்டமன்ற தேர்தலை மிஞ்சும் வகையில் பெரும் குழப்பங்கள் நமது ஊரில் நடந்து வருகிறது. இப்போது ஊர் இரண்டு குழுவாக பிரிந்து நிற்கிறது . ஊர் இரண்டானால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பது போல் சிலர் சுயலாபதிகாக செயல்படுகிறார்கள் என்று நினைக்கும் அளவுக்கு வந்தது விட்டது. ஊரின் ஒற்றுமை பற்றி கவலைப்பட நமக்கு என்ன என்று செயல்படுகிறார்கள் .
துபாய், சவுதி. மற்றும் சென்னையில் வசிக்கும் ஸ்ரீவை ஜமாஅத் சார்ந்த மற்றும் ஸ்ரீவை ஊரில் இருத்து வெளியேறிய நமது நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் முதவிலுல் ஹைய்ராத் மஜ்லிஸ் என்னும் ஸ்ரீவை ஜமாஅத் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாக்கள்.
எல்லா ஊர்களிலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஊரின் ஒற்றுமை கருதி சமாதானமாக அல்லது விட்டு கொடுத்து செயல்படுகிறார்கள் . நமது ஊரில் மட்டும் ஏன் இப்படி அடித்து கொள்ளும் அளவுக்கு உள்ளனர் என்பது வல்ல இறைவன் அல்லா ஒருவனுக்கே தெரியும்.
வஸ்ஸலாம்
ஸ்ரீவை மக்கள்
ஸ்ரீவைகுண்டம் ஜாமாத்தை பொருத்தவரை......யாருக்கும் நடுநிலை பண்பு கிடையாது.மதிப்புமிக்க மனிதர் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சிலரே என் கண்ணோட்டத்தில் தெரிந்தாலும்..அவர்களும் சிண்டு முடிந்து விடுவதில்தான் அக்கறை அதிகம் என்று தோன்றுகிறது.எல்லாத்திலும் அரைவேக்காட்டுத்தனம்....தான் நினைப்பதுதான் சரி என்று தன் சுயலாபத்திற்காக வளைக்கும் வரட்டு கொளரவம். தானும் நல்லது செய்வதில்லை..உன்மையான அக்கறையோடு செய்ய நினைப்பவர்களையும் அவதூறு பரப்பி கெடுப்பது..இதுவே பொழப்பாக (தின்ன சோறு செரிப்பதற்காக)அலையும் ஒரு கூட்டம்.
பதிலளிநீக்குஅருமை ஜாமாத் உறுப்பினர்களே....கொஞ்ச காலமாகத்தான்....நம் இளைய சமுதாயம் பெருவாரியாக வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்து..மேலும் சேவை மனப்பான்மையால்.... நம் ஸ்ரீவை முஸ்லிம் சமுதாயம் வசதியில்லாத குடும்பத்திற்கு உதவ நினைக்கிறார்கள்...அப்படி நினைப்பவர்களின் எண்ணத்திற்கு அஸ்திவாரமாய் இருந்து ஆக்கப்பூர்வாமான செயல்களை ஊரில் இருந்துகொண்டு செயல்பட வேண்டுகிறேன்...
அரசியலை மிஞ்சும் உங்கள் குடுமிபிடி சச்சரவுகளை விடுத்து ஒன்றுப்பட்ட ஒற்றுமையான (இஸ்லாம் கற்றுத்தந்த) சகோதரத்துவத்துடன்..பக்குவப்பட்ட ஜமாத்தாக வரும்காலங்களில்...செயல்பட இறைவன் அருள்புரிவானாக.
.......
......
(பெயரில்லாமல் எழுதியதற்காக வருந்துகிறேன். உன்மையான அக்கரையோடு நினைப்பதை சொல்ல பெயர் ஒன்றும் முக்கியம் இல்லை என்று தோன்றியது)
!I wish to publish this post!