செவ்வாய், 8 செப்டம்பர், 2009

விரும்பினால் மட்டுமே சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு: 2011-ல் அமல்

விரும்பினால் மட்டுமே சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வில் பங்கேற்கும் முறை 2010-11 கல்வியாண்டில் அமல் செய்யப்படும் என மத்திய மனித ஆற்றல் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் கூறியதாவது:

நடப்புக் கல்வியாண்டிலே மதிப்பெண்ணுக்கு பதிலாக "கிரேடிங்' முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதே பள்ளியில் 11-ம் வகுப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வை எழுத வேண்டியதில்லை.

2010-ல் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதும் 8 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக "கிரேட்' வழங்கப்படும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin