வியாழன், 24 பிப்ரவரி, 2011

மின்கட்டணம் வசூல் செய்ய புதிய திட்ட: 1ம் தேதி முதல் அமல்!


தூத்துக்குடி மாவட்டத்தில் மின் கட்டணம் வசூல் செய்ய புதிய திட்டம் வருகிற 1ம் தேதி(செவ்வாய்க்கிழமை) முதல் அமலாகிறது.

இது குறித்து தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் ஆர்.அமிர்த ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி கடந்த 01-12-2010 முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மின்கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மின்கட்டணம் செலுத்தும் முறையில் புதிய திட்டம் அமல் படுத்தப்படுகிறது. 30 நாட்கள் மின்கட்டணம் கணக்கெடுக்கவும், 30 நாட்கள் வசூல் என்ற புதிய முறை வருகிற 1ம் தேதி(செவ்வாய்க் கிழமை) முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் முன்கூட்டியே பணம் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் ஆர்.அமிர்த ரத்தினகுமார் தெரிவித்து உள்ளார்.

தகவல் : தூத்துக்குடி வெப் சைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin