செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஸ்ரீவையில் கட்டிமுடிக்கப்படாத பாலத்திலிருந்து தவறி விழுந்து பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.

ஸ்ரீவைகுண்டத்தில் கட்டிமுடிக்கப்படாத பாலத்திலிருந்து தவறி விழுந்து பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.

ஸ்ரீவைகுண்டம் பழைய பாலத்தை அகலப்படுத்தும் பணி 2009-ல் தொடங்கியது. 2010-ம் ஆண்டு ஜூலைக்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டது.ஆனால் இன்னும் அப்பணி முடிவடையவில்லை.

ஸ்ரீவைகுண்டம் வரும் ஆழ்வார்தோப்பு இணைப்புச் சாலையில் பாலத்தின் உயரம் இருபுறங்களிலும் சுமார் 20 அடி உள்ளது. ஆனால் கைப்பிடிச் சுவர் கட்டப்படவில்லை.

பாதுகாப்பு இல்லாத இப்பகுதியில்தான் பொதுமக்கள் தினமும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில், சனிக்கிழமை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் செ. மாணிக்ககுமார் தனது நண்பர்களுடன் புதிய பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தாராம்.அப்போது தவறி கீழே விழுந்ததில் அவர் இறந்தார்.

சம்பவ இடத்தை வட்டாட்சியர் வசந்தா பார்வையிட்டார்.இது குறித்து, ஸ்ரீவைகுண்டம் போலீஸர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin