செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு

சமூக சேவகர் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு நடத்த அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கந்தசிவசுப்பு, துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கூறி கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து நாளை (24ம் தேதி) ஒரு நாள் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அடைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பசுப்பொன் ரத்ததானக்கழக நிறுவனர் ராஜா, வியாபாரிகள் சங்க செயலாளர் ஐசக், இணை செயலாளர் முத்துமாலை, பொருளாளர் லெட்சுமணன் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin