புதன், 24 ஆகஸ்ட், 2011

ஸ்ரீவைகுண்டம் அணையில் ஆட்சியர் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் திடீர் ஆய்வு செய்தார்.

இந்த அணைப் பகுதியிலிருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

இப்போது, ரூ.28 கோடி திட்ட மதிப்பீட்டில் ராட்சத குழாய்கள் பதித்து, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் தாமிரபரணி ஆற்றுக்குள் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பற்றாக்குறையின்போது விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்தது போகத்தான் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென விதிமுறை உள்ளது. ஆனால், அதையும் மீறி தூத்துக்குடியில் உள்ள 8 தொழிற்சாலைகளுக்கு அளவுக்கு அதிகமாக ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம், வடகால் பகுதிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, அணைக்கட்டில் உள்ள அமலைச் செடிகளை அகற்றவும், ஆற்றைத் தூர்வாரவும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் வசந்தா, ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கங்காதரன், பிரிவு அலுவலர் வினோத்குமார் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin