
நெல்லை: தபால் அலுவலங்களில் ஓணம் பண்டிகையை ஓட்டி நடந்த சிறப்பு தங்க நாணய விற்பனையில் நெல்லை தலைமை தபால் அலுவலகம் 3 கிலோ தங்கம் விற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் 81 தபால் அலுவலகங்களில் தங்க நாணயங்கள் வி்ற்கப்படுகின்றன. ஓணம் பண்டிகையை ஓட்டி தங்க நாணயங்களுக்கு 6 சதவீதம் சிறப்பு தள்ளுபடி, கடந்த 26ம் தேதி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை வழங்கப்பட்டது.
இதனால் தபால் அலுவலங்களிலும் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதியது. இதில் 5 கிராம், 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை மக்கள் அதிகம் வாங்கினர். இதன் காரணமாக நெல்லை உள்ளிட்ட சில தபால் அலுவலங்களில் 5 கிராம் மற்றும் 8 கிராம் தங்க நாணயங்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டது.
நெல்லை ஸ்ரீபுரம் லைமை தபால் அலுவலகத்தில் துவக்கத்திலிருந்தே தங்க நாணயங்கள் விற்பனை படுஜோராக நடந்தது. இதனால் ஓணம் பண்டிகை சிறப்பு விற்பனை காலத்தில் 3 கிலோ 12 கிராம் எடையுள்ள தங்க நாணயங்கள் 16 நாட்களில் விற்கப்பட்டன.
இந்த விற்பனை மூலம் நெல்லை தபால் அலுவலகம் தமிழகத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளது.
இதுகுறித்து நெல்லை கோட்ட முதன்மை அஞ்சல கண்காணிப்பாளர் குமாரசாமி கூறுகையில், தபால் அலுவலங்களில் தங்க நாணயங்கள் விற்கப்படுவதால் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் வாங்கி செல்கின்றனர்.
இதனால் தான் நெல்லையில் 3 கிலோ எடையுள்ள தங்க நாணயங்கள் ரூ.54 லட்சத்து 2 ஆயிரத்து 225க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை மூலம் தமிழகத்தில் நெல்லை தபால் அலுவலகம் முதலிடத்தை பிடித்துள்ளது என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக