ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் பட்டா மாறுதலில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கபட்டுள்ளனர் .
ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பட்டாமாறுதல் கோரி பெறப்படும் மனுக்கள் மீது பட்டா வழங்குதல் பிரச்சனையில் முறை கேடுகள் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். பட்டா மாறுதல் மனுக்கள் மீது கலெக்டர் அலுவலக நடைமுறைகள் மற்றம் நெறிமுறைகள் அமுல்படுத்தபடவில்லை.
மாவட்ட கலெக்டர் அலுவலக ஆணைப்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்தும் நில உடமைதாரர்களிடமிருந்தும் நேரடியாக பெறப்படும் மனுக்களை தாலுகா அலுவலகத்தில் 6ம் நம்பர் மாஸ்டர் பதிவேட்டில் தினசரி வரிசைப்படி பதிவு செய்து, உட்பிரிவு கேட்கும் மனுவாக இருந்தால் அதனை சர்வே பிரிவிற்கும், உட்பிரிவு தேவையற்ற மனுவாக இருந்தால் அதனை விஏஓ.,வுக்கும் அனுப்பி அவர்கள் அறிக்கையை பெற்று மண்டல துணை வட்டாட்சியர் கம்ப்யூட்டரில் கணக்கை சரிபார்த்து உத்தரவு பிறப்பித்து அதனை கம்ப்யூட்டரில் பதிவு செய்து மனுதாரருக்கு தபால் மூலம் தெரிவித்து மனுதாரருக்கு 15 நாட்களில் பட்டா வழங்க வேண்டும்.ஆனால் பட்டா மாறுதல் அப்படி வழங்கபடவில்லை.
உட்பிரிவு தேவைப்பட்டால் 30 நாட்களில் பட்ட வழங்க வேண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த நடைமுறை அறிவிப்பை ஸ்ரீவைகுண்டம் வட்ட அலுவலக பட்டாபிரிவு செயல்படுத்துவதில்லை. இதனால் மனுதாரர்கள் பலமாதங்களாகியும் பட்டா பெறமுடிவதில்லை.
இதனால் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் பட்டாபிரிவு அலுவலர்கள் மற்றும் மண்டல துணை தாசில்தார் ஆகியோருக்கும் பொதுமக்களாகிய மனுதாரர்களுக்கும் தினசரி வாக்கு வாதங்கள் ஏற்பட்டு தாலுகா அலுவலகத்தின் மற்ற வேலைகளும் பாதிக்கபடுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படும் நிலை உருவாகிறது. இதனால் ஏனைய அரசின் நலத்திட்டங்களும் பாழ்படும் நிலை ஏற்படுகிறது. உட்பிரிவு மனுக்களுக்கு 30 நாட்களிலும், உட்பிரிவு தேவையற்ற மனுக்கள் 15 நாட்களிலும் பட்டா மாறுதல் செய்து கொடுக்கபடும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலக அறிவிப்பு இருந்த போதிலும் 300 நாட்களுக்கு மேல் ஆகியும் பட்டாமாறுதல் செய்து கொடுக்கபடவில்லை.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதிமுதல் 18ம் தேதிவரை நடந்த ஜமாபந்தியின் போது 1393 மனுக்கள் பெறப்பட்டு ஜீலை மாதம் 27ம் தேதி வரை 54 நாட்களில் ஆகியும் 640 மனுக்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது.
753 மனுக்கள் நிலுவையில் உள்ளது. இந்த மனுக்களில் பட்டாமாறுதலுக்காக வந்த மனுக்கள் 788 அதில் 488 மனுக்களுக்கு மட்டும் தீர்வுகண்டு 300 மனுக்கள் நிலுவையில் உள்ளது. அதில் உட்பிரிவுக்காக வந்த மனுக்களில் 53 மனுக்களுக்கு மட்டுமே தீர்வு கண்டு 174 மனுக்கள் நிலுவையில் உள்ளன.
இதனால் பொதுமக்களின் நலன் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது. அரசிடம் எதுபற்றி விண்ணப்பித்தாலும் 30 நாட்களுக்குள் விசாரணை செய்து மனுதாரருக்கு உரிய தகவலை தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் 2008ம் ஆண்டு அரசு ஆணை எண் 114க்கு விரோதமாகும்.
இதனால் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தினசரி வாய் தகராறுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனால் அரசு மக்கள் மத்தியில் மதிப்பை இழந்து வருகிறது. இதனால் பட்டாபிரிவில் 6 நம்பர் பதிவேட்டில் பதிவு செய்யபட்டுள்ள தவணை கடந்த மனுக்களை பரிசீலனை செய்து பட்டா வழங்கவேண்டும் , தள்ளுபடி செய்யபட்ட மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்து பட்டா வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள மனுக்களை வரிசைப்படி பரிசீலனை செய்து பட்டா வழங்க வேண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலக அறிவுறைப்படி பட்டாமாறுதல்செய்யப்பட்ட மனுக்களுக்கு தபால் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் நிலுவை மனுக்களை முடித்த பின் ஒவ்வொரு மாதமும் பட்டா மாறுதல் மனுக்களுக்கு தீர்வுகாண வேண்டும், முன்னிலையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு கண்ட பின்பே பின்னிலையில் உள்ள மனுக்களுக்கு பரிசீலனை எடுக்கவேண்டும்.
இதனால் பொதுமக்கள் அவதிக்கு ள்ளாகாமலும், அதை சமயத்தில் விரைவாகவும் பட்டாமாறுதல் செய் வதற்கும் வழிவகுக்கும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம வாழ் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் நயினார் குலசேகரன் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார்.
செய்தி - தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக