சனி, 12 செப்டம்பர், 2009

யாருக்கு ஜகாத் அளிக்கலாம்

இறையின் உவப்பைப் பெறும் ஒரே நோக்கத்துடன் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் மீது ஜகாத் கடமையாக்கப்பட்டுள்ளது. நோன்பு நோற்பது போலவே, இறையின் உவப்பிற்காகவே ஜகாத்தும் வழங்கப்பட வேண்டும்.

அந்த ஒரு நோக்கமே ஜகாத் வழங்குபவரின் மனதில் இருக்க வேண்டும். வேறு எந்த எண்ணமோ, நோக்கமோ இருந்து, ஜகாத் வழங்கினால், அது அவர்களது தூய வழிபாட்டையே ‌வீணாக்கிவிடும்.

உங்களால் ஜகாத் பெற்றவர்கள் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பவர்கள் என்ற எண்ணத்தை மனதில் ஏற்காதீர்கள். உங்களுக்கு ஜகாத் வழங்க அவர்கள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறார்கள். எனவே நீங்களே அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்கள்.

மேலும், உங்களிடம் ஜகாத் பெற்றவர்கள் உங்களது பெருமையை கூற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளரவிடாதீர்கள். இதுபோன்ற எண்ணம் கடுகளவும் உங்களது சிந்தனையில் இருக்கக் கூடாது.

ஜகாத் பெறத் தகுதியானவர்களைத் தேர்வு செய்து அளிக்க வேண்டியதும் ஜகா‌த் அ‌ளி‌ப்பவ‌ரி‌ன் கடமையா‌கிறது.

ஜகாத் பெறத் தகுதியானவர்கள் என்று குறானில் 8 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

அதாவது, ஏழைகள், வறியவர்கள், ஜகாத்தை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள், அடிமைகள், கடன் சுமையால் வாடுபவர்கள், இறைவழியில் உழைப்பவர்கள், பயணிகள் ஆகியவர்கள் ஜகாத் பெற தகுதியானவர்கள்.

எனவே ஜகாத் அளிக்கும்போது கண்ணுங்கருத்துமாக இருந்து முறையாக அந்தக் கடமையை நிறைவேற்ற இறையருளைப் பெறுவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin