வியாழன், 17 செப்டம்பர், 2009

‌பி‌த்ரா அ‌‌ளி‌க்கு‌ம் முறை

பி‌த்ரா கொடு‌ப்பத‌ற்கு ஒரு அளவு உ‌ள்ளது. ‌பி‌த்ராவை எ‌ப்போது கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற கால ‌நிலையு‌ம் ‌நி‌ர்‌ண‌யி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அதே‌ப்போல ‌பி‌த்ராவை எ‌ப்படி‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் இ‌ஸ்லா‌மிய ம‌க்களு‌க்கு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நோன்புப் பெருநாள் தர்மமாக ஏதேனும் உணவையோ, பேரீச்சம் பழத்தையோ தீட்டப்படாத கோதுமையோ பாலாடைக் கட்டியையோ அல்லது உலர்ந்த திராட்சையோ ஒரு ஸாவு (பித்ரா) கொடுப்போம் என அபூ ஸயீதுல் குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

‌பி‌த்ராவை ஒரு ஸாவு அளவு கொடுக்க வேண்டும் என்று மேலேயுள்ள நபி மொழி கூறுகிறது. இரண்டு கைகளாலும் நான்கு முறை அள்ளிக் கொடுப்பதே ஒரு ஸாவு என்று கூறப்படுகிறது. எனவே, நாம் கொடுக்கும் உணவுப் பொருட்களை இந்த முறையில் அளந்து கொடுக்கலா‌ம்.

இ‌ந்த ‌பி‌த்ராவை பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன் அல்லது பெருநாள் தொழுகைக்கு முன் கொடுத்துவிட வேண்டும். பெருநாள் தொழுகைக்குப் பிறகு கொடு‌க்கு‌ம் எதுவு‌ம் பித்ராவாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மக்கள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மத்தை கொடுத்து விடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
பித்ரா கொடுப்பதற்கான கடைசி நேரம் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆரம்ப நேரம் பற்றிக் கூறப்படவில்லை.

ஸஹாபாக்களும் பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன் கொடுத்துள்ளார்கள். ஸஹாபாக்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே கொடுத்து வந்தார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

‌பி‌த்ரா‌க்களை‌ப் பெற ஏழைக‌ள் ‌வீடு ‌வீடாக வர வே‌ண்டிய அவ‌சிய‌த்தை‌த் தடு‌க்குமாறு‌ம், ‌பி‌த்ரா கொடு‌ப்பவ‌ர்க‌ள், த‌ங்களது பொரு‌ட்களை ஒரே இட‌த்‌தி‌ல் சே‌ர்‌த்து, அ‌வ்வூ‌ர் ஏழை, எ‌ளியவ‌ர்களை அழை‌த்து அ‌ந்த இட‌த்‌திலேயே அனைவரு‌ம் ‌பி‌த்ரா வழ‌ங்‌கினா‌ல், ஏழைக‌ளி‌ன் அவல‌ங்களு‌க்கு எ‌ளிதாக ‌தீ‌ர்வு காணலா‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

‌பி‌த்ராவை‌ இதுபோ‌ன்று ஒரே இட‌த்‌தி‌ல் பல‌ர் அ‌ளி‌ப்பதா‌ல் அ‌திகமான ஏழைகள் நன்மையடைவார்கள். தனித்தனியாகக் கொடுக்கும் போது ஒரு சிலர் மட்டுமே நன்மையடைவர். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் ஏழைகளின் வாழ்வு பிரகாசமானதாக அமையும். கொடுக்கும் பித்ரா அர்த்தமுள்ளதாக இருக்கும்.

ஆகவே நோன்புப் பொருநாளுக்காக தயாராகுவதோடு, ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் மீது கடமையான ஸகாத்துல் பித்ராவை வழங்கி நன்மைகளில் பங்கு பெறத் தயாராகுவோமாக.

1 கருத்து:

  1. இஸ்லாமிய சகோதர்களே பித்ரா என்னும் இந்த சான்ஸ்சை பயன்ப்படுத்தி நம்ம பகுதியை சார்ந்த சகோதர்ரர்களின் பித்ராவை ஒன்று சேர்த்து நம் SRIVAI மக்களுக்கு உதவிடுவோம்

    பதிலளிநீக்கு

LinkWithin

Blog Widget by LinkWithin