சனி, 5 செப்டம்பர், 2009

காயல்பட்டினம் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 19-வது ஆண்டு விழா வாவு வஜிஹா மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரித் தலைவரும் காயல்பட்டினம் மூன்றாம் நிலை நகர்மன்றத் தலைவருமான வாவு செய்யது அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார்.

பள்ளித் தாளாளர் வாவு எம்.எம்.மொகுதஸிம் மற்றும் தலைமை ஆசிரியை எம்.செண்பகவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியை வசுமதி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

மெட்ரிக் தேர்வில் பள்ளிக்கு நூறு சதவிகித தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அதற்கு உதவிய ஆசிரிய, ஆசிரியைகள் கெüரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin