சீனாவின் உரும்கி நகரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் இனவெறி தாக்குதலை கண்டித்து நடைபெற்ற திடீர் போராட்டம் காரணமாக அங்கு காணப்பட்ட பதற்ற நிலை தணிந்து தற்போது அமைதி நிலவுகிறது.
சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சிஞ்சியான் மாகாணத்தின் உரும்கி நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கலவரத்தில் 197 பேர் பலியானார்கள் ; 1,600 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் கலவரம் ஓய்ந்து அங்கு அமைதி திரும்பிய நிலையில், கடந்த இரு வாரங்களாக இஸ்லாமியர்களை குறிவைத்து ஊசி போடும் சிரிஞ்சால் குத்தி தாக்குதல் நடைபெறுவதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் இந்த தாக்குதலைக் கண்டித்து உரும்கி நகரில் இஸ்லாமியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து கலவரம் மூண்டது.இதில் 5 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நிலைமை கட்டுங்கடங்காமல் செல்லும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் பாதுகாப்பு படையினர் அங்கு கூடுதலாக வரவழைக்கப்பட்ட்டனர்.
இந்நிலையில் கூடுதலான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உரும்கி நகர் உள்பட சிஞ்சியாங் மாகாணத்தில் தற்போது அமைதி திரும்பி, இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினன்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக