சனி, 5 செப்டம்பர், 2009

கிராமத்து மாணவர்களின் மினி மாராத்தான் போட்டிகள்


வ.உ.சி 138வது பிறந்த தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மினி மாராத்ததான் போட்டிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனார் 138வது பிறந்த தினவிழாவை முன்னிட்டு வ.உ.சி விளையாட்டுக் கழகத்தின் 22ம் ஆண்டு விழா, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது. மாணவர்களுக்கு 10 கி.மீ தூரமும், மாணவிகள் மற்றும் சிறுவர்ளுக்கு 5 கி.மீ தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

போட்டிக்கு ஓட்டப்பிடாரம் ஓன்றிய சேர்மன் சுகிர்தாசண்முகையா தலைமை வகித்தார். சென்னை ஆதர்ஸ் ஷிப்பிங் மேனேஜிங் டைரக்டர் விஜயகுமார், ஒட்டப்பிடாரம் தொழில் அதிபர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். விளையாட்டுக் கழக செயலாளர் வீரபாண்டியன் வரவேற்றார்.

மாணவர்களுக்கான போட்டியில் 234 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல்பரிசை கீழமுடிமன் புனிதஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர் பொன்மாரி முதலிடத்தை பெற்றார். காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவர் தங்கவேல் முருகனுக்கு 2வது இடம் பெற்றார்.

மாணவிகளுக்கான போட்டியை ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் இசக்கி துவக்கி வைத்தார். இதில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்ப ள்ளி மாணவி அனிதா முதலிடம் பெற்றார். தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவி கார்த்திகா 2ம் இடம் பெற்றார். காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவி முத்துலட்சுமிக்கு 3ம் இடம் பெற்றார். சிறுவர்களுக்கான போட்டியில், முப்புலிவெட்டி பஞ்., துவக்கப் பள்ளி மாணவர் லட்சுமணப் பெருமாள் முதலிடத்தையும், ஓட்டப்பிடாரம் டி.எம்.பி மெக்கவாய் மேல்நிலைப் பள்ளி மாணவர் சுரேஷ் கோபி 2ம் இடத்தையும் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாஞ்சை பஞ்., தலைவர் லதா கருணாநிதி, ஓட்டப்பிடாரம் எல்.ஐ.சி வளர்ச்சி அலுவலர் மாதவன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஓன்றிய செயலாளர் வீரபாண்டி சரவணன், எப்போதும்வென்றான் பஞ்., தலைவர் கனகவள்ளி லிங்கராஜ், இந்திரா நகர் ஆசிரியர் முத்துவேல்சாமி, கீழமுடிமன் ஓன்றிய கவூன்சிலர் காசி, சிலோன் காலனி அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் கள்ளாண்டபெருமாள் ஆகியோர் பரிசு வழங்கினர்.

மேலும், ஆசிரியர்கள் பிரவின், ஜெயக்குமார், பெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணை செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஓட்டப்பிடாரம், வ.உ.சி விளையாட்டுக் கழகத்தினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin