சனி, 5 செப்டம்பர், 2009

தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனாரின் 138வது பிறந்தநாள் விழா


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 138வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை மு‌ன்‌னி‌ட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பாக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி மல‌ர் தூ‌வி ம‌ரியாதை செலு‌த்‌தினா‌ர்.
மேலு‌ம் செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தின‌ர்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்திலும் வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மட்டக்கடையில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுபினர் எம்.பி.சுடலையான்டி, பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் பிரம்மநாயகம், செளந்திர பாண்டியன், துரை கந்தகாமி உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஓட்டப்பிடாரம் வ.உ.சி. பிறந்த இல்லத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி.சி. ஜெயலட்சுமி ஆதிலிங்கம், வ.உ.சி.யின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சைவ வேளாளர் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin