திங்கள், 7 செப்டம்பர், 2009

குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: குளிக்கத் தடை


தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், அருவிகளில் பயணிகள் குளிக்க போலீஸôர் தடைவிதித்தனர்.

சனிக்கிழமை இரவு குற்றாலம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் 2 மணி நேரம் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

பின்னர், பயணிகள் அருவிகளின் ஓரமாக நின்று குளிக்க போலீஸôர் அனுமதித்தனர்.
காலையிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பகல் 12 மணி முதல் பேரருவியில் குளிக்க போலீஸôர் மீண்டும் தடைவிதித்தனர்.

இதேபோல, குற்றாலம் ஐந்தருவியிலும் பிற்பகலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பயணிகள் குளிக்க போலீஸôர் தடைவிதித்தனர். பழைய குற்றாலம் அருவியில் மட்டும் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

மாலை முதல் குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin