ஹாக்காங்கின் வேஸ்ட் கோவ்லூன் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் லிப்ட் ஒன்று 30வது மாடியில் இருந்து கீழே விழந்ததில் மூன்று தொழிலாளிகள் பலியானார்கள்.
இந்த விபத்து 118 மாடி கொண்ட உலக வர்த்தக மையத்தில் நடந்துள்ளது. இந்த மையம் சுமார் 484 மீ உயரம் கொண்டது. தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு இந்த கட்டிடம் செயல்படுத்த தொடங்கும் சமயத்தில் உலகின் மூன்றாவது பெரிய கட்டிடமாகவும், ஹாங்காங்கின் உயரமான கட்டிடமாக இருக்கும்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 1.20 மணிக்கு கட்டிடத்தின் 30வது மாடியில் லிப்ட் பகுதியில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த லிப்ட் திடீரென்று கீழ் நோக்கி விழுந்து, 8வது மாடியில் சென்று நின்றது.
இதை சற்று எதிர்பாராத தொழிலாளிகள் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக