
ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கம்யூ. வேட்பாளர் ஜி. தனலட்சுமி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாக்குகள் சேகரித்தார்.
பெருமாள் சன்னதி தெரு, சகட்டுகார தெரு, சிவன் கோயில் தெரு, தெப்பக்குளத்தெரு, மேலக் கோட்டை வாசல் தெரு, கீழக்கோட்டை வாசல் தெரு, தெற்கு மாடத் தெரு, வடக்கு மாடத் தெரு, பேருந்து நிலையம், கடைவீதி, ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளருடன் முன்னாள் பேரூராட்சித் தலைவர் தி. உலகம்மாள், ஒன்றியச் செயலர் கந்தசாமி, நகரத் தலைவர் ராமலிங்கம், கட்டுமானத் தொழிலாளர் சங்க நகர செயலர் முருகன், பேச்சிமுத்து, முருகேசன் உள்ளிட்டோர் வேட்பாளருடன் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக