சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வைராலஜி துறை, எம்.எஸ்சி. (மாலிகுலார் அண்டு டயாக்னாஸ்டிக் வைராலஜி) என்ற முதுகலைப் பட்ட புதிய பாடப் பிரிவை இந்த ஆண்டில் தொடங்க உள்ளது.
இதற்கான கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர் மைக்ரோபயாலஜி அல்லது பையோடெக்னாலஜி இளம் அறிவியல் பாடப் பிரிவில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
படிப்புக் காலம்: 2 ஆண்டுகள் ஆகும்.
பாடத்திட்ட விளக்கம்
* இரண்டு வருட முதுகலை வைராலஜி பட்டப் படிப்பு
* சர்வதேச தரம் வாய்ந்த பாடத் திட்ட முறை
* தொலைநோக்கு தொழில்துறை அம்சங்களை கொண்டது
* தரமான இரண்டு வருட ஆய்வுக் கூடப் பயிற்சி
சிறப்பம்சங்கள்
* சர்வதேச புகழ் வாய்ந்த மருத்துவ பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் சிறந்த முறையில் பயிற்சி.
* அனைத்து விதமான ஆய்வுகள் மேற்கொள்வதற்கான பரிசோதனைக் கூட உள்கட்டமைப்பு
* இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வைராலஜி துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
* சிறந்த ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதற்கான பாடத்திட்டம்.
21.07.2009 முதல் விண்ணப்பத்தைக் கீழ்கண்ட இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் www.tnhealth.org / www.tn.gov.in
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10.08.2009
நுழைவுத் தேர்விற்கான தேதி: 22.08.2009
இந்த விவரங்களைத் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வி.கு.சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக