திங்கள், 3 ஆகஸ்ட், 2009

'மின்னணு இயந்திரங்களில் எளிதாக மோசடி செய்யலாம்'


புவனேஸ்வர்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்வது மிகப் பெரிய வேலையல்ல. மிக எளிதாக செய்ய முடியும். அதை நாங்கள் தேர்தல் ஆணையத்தின் முன்பு நிரூபித்துக் காட்டுவோம் என்று ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த நிபுணர் குழு ஒன்று வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

புவனேஸ்வரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் எப்படியெல்லாம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோல்மால் செய்ய முடியும் என்பதை அவர்கள் விளக்கிக் காட்டினர்.

முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இந்த நேரடி விளக்கம் நடைபெற்றது.

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முன்கூட்டியே புரோக்ராம் செய்து 'பிராடு' செய்யலாம் என்பதை நேரடியாக ஜன சைத்திரிய வேதிகா அமைப்பின் துணைத் தலைவர் வி.வி.ராவ் விளக்கினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறை கேடு செய்ய முடியும் என்று மின்னணு தொழில் நுட்ப நிபுணர்கள் பலரும் தேர்தல் பார்வையாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்று நெட் இண்டியா என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரி பிரசாத் தெரிவித்தார்.

தில்லுமுல்லு செய்ய முடியாத அளவில் தற்போதைய இயந்திரங்களை மேம்படுத்தும் வரை இவற்றை எந்தத் தேர்தலிலும் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை ஹைதராபாத், டெல்லி, நாக்பூர், மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் ஏற்கனவே நேரடியாக விளக்கி உள்ளோம் என்றும் கூறினார் ஹரிபிரசாத்.

மேலும், தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை டெல்லியில் தங்கள் முன்னிலையில் நேரடியாக நிரூபிக்குமாறு தேர்தல் ஆணையம் எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் எங்களது வாதத்தை நாங்கள் நிரூபிப்போம் என்றும் இவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin