சனி, 29 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் பொருள்கள் பறிமுதல்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பொதுமக்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரேஷன் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பறக்கும்படை வட்டாட்சியர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், செக்காரக்குடி கிராம நிர்வாக அதிகாரி இம்மானுவேல் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர்
.
தெய்வச்செயல்புரம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேர் அதிகாரிகளை கண்டதும் தாங்கள் கொண்டு வந்த 2 மூட்டைகளை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

அதிகாரிகள் அருகில் சென்று பார்த்தபோது மூட்டையில் ரேஷன் அரிசி இருந்ததைக் கண்டறிந்து அவற்றை கைப்பற்றினர்.

இதேபோல, கீழசெக்காரக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உள்பட்ட ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சோதனை செய்ததில் 5 மூட்டை உளுந்தம் பருப்பு, ஒரு மூட்டை துவரம் பருப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, சங்கச் செயலர் சுப்புலட்சுமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், சங்கத்திற்கு அருகிலுள்ள ரேஷன் கடையில் 364 கிலோ அரிசி, 46 கிலோ சீனி இருப்பு குறைவாக இருந்ததால் அந்த விற்பனையாளருக்கு ரூ. 2,980 அபராதம் விதிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ரேஷன் பொருள்கள் ஸ்ரீவைகுண்டம் நுகர்வோர் சேமிப்பு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin