சனி, 29 ஆகஸ்ட், 2009

ஜெ.பி. நெல்லை பட்டணம், ஆர்.கே. ஹவுசிங் மனைகளை வாங்க வேண்டாம்: ஆட்சியர்

திருநெல்வேலியில் அனுமதி பெறாத ஜெ.பி. நெல்லை பட்டணம், ஆர்.கே. ஹவுசிங் ஆகிய நிறுவனங்களின் வீட்டுமனைகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி உள்ளூர் திட்டக் குழுமப் பகுதிக்குள் அமைந்துள்ள மாநகராட்சிப் பகுதி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் ஜெ.பி. நெல்லை பட்டணம், ஆர்.கே. ஹவுசிங் மற்றும் பல நிறுவனங்கள் வீட்டுமனைப் பிரிவுக்கு உள்ளூர் திட்டக் குழுமத்தில் தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் திட்ட அனுமதி பெறவில்லை.

அந் நிறுவனங்கள் மற்றும் சில தனிநபர்கள், அங்கீகாரம் பெற்ற மனைகள் என விளம்பரம் செய்து வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

அனுமதி வழங்கப்படாத அந்த மனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளாட்சிகளால் வழங்க இயலாது. எனவே, அனுமதியற்ற அந்த மனைப் பிரிவுகளை பொதுமக்கள் வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin