சனி, 29 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம்

ஸ்ரீவைகுண்டத்தில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜை நடத்தப்பட்டது. பின்னர், தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.

இதையொட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் ஊர்வலம் நடைபெற்றது. இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். ராஜதேவமித்திரன் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கிவைத்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் முத்தையா பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் வட்டத் தலைவர் வேலு, இந்து முன்னணி ஒன்றியச் செயலர் பாலதண்டாயுதம், நகரத் தலைவர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தில் பாஜக பொதுச்செயலர் ராஜா, இளைஞரணி பொதுச்செயலர் முத்துராமலிங்கம், நகரத் தலைவர் மணி, ஆர்.எஸ்.எஸ். ஒன்றியப் பொருளாளர் அயோத்தி சங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin