துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களது வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கான பிரத்யேக இணையத்தளம் www.jamalians.com துவக்க நிகழ்ச்சி லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியர் கலந்தர் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் நமது கல்லூரியின் முன்னாள் உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராகி பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
அபதுல் ஷுக்கூர் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வருடந்தோறும் கல்லூரியில் முன்னாள் மாணவர் தினமாக அனுசரித்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதில் தனக்கும் இவ்விருது வழங்கியதை நினைவு கூர்ந்தார்.
ஈடிஏ அஸ்கான் மனிதவள மேம்பாட்டுத்துறை நிர்வாக செயல் தலைவர் எம். அக்பர் கான் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள www.jamalians.com என்ற இணையத்தளத்தினை துவக்கி வைத்தார்.
இதற்காக தங்களது பங்களிப்பினை நல்கிய ஃபரீஜ், ஜாபர் சித்தீக், அப்துல் ஷுக்கூர், இல்யாஸ், பதாவுல்லாஹ், மீரான், சுல்தான், ஜாவித் உள்ளிட்டோரைப் பாராட்டினார்.
வேலூர் எம்.பி. எம். அப்துல் ரஹ்மான், கல்லூரியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் ஆற்றி வரும் பணிகள் அளவிடற்கரியது. எம்பி ன மட்டுமல்லாது கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற வகையில் எனது பணிகள் என்றும் தொடரும் என்றார்.
கல்லூரியின் வளர்ச்சிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமாரின் பணிகளை நினைவு கூர்ந்தார்.எந்த் நேரத்திலும் கல்லூரிக்கு தனது சேவை தொடரும் என்றார்.
கல்லூரி முன்னாள் மாணவர்கள் எம். அப்துல் கத்தீம்,எஸ்.எம். ஃபாரூக், ஹாமித், முத்து உள்ளிட்டோர் தங்களது மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். ஜாபர் சித்திக் நன்றி கூறினார். முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக