பன்றிக் காய்ச்சல் பீதி இருப்பதால், நாள்பட்ட மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை தள்ளிப் போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர் மற்றும் செயல் அலுவலர் கே.அலாவுதீன் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
இந்த ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்வோர் பன்றிக் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி போட்டதற்கான தகுந்த தடுப்பூசி சான்றிதழைப் பெற வேண்டும். அதை, ஹஜ் விசா பெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.
நாள்பட்ட மற்றும் தீரா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த ஆண்டில் தங்களுக்கான ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை அவரவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தள்ளிப் போட வேண்டும். ஹஜ் பயணம் மேற்கொள்வோரும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக