புதன், 26 ஆகஸ்ட், 2009

24,000 பேருக்கு வேலை!-டிசிஎஸ்


பெங்களூர்: டிசிஎஸ் சமீபத்தில் தேர்வு செய்த 24,000 பேருக்கும் வேலை தரப்படும் என்று டாடா கன்ஸல்டன்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மகாலிங்கம் இதுபற்றிக் கூறுகையில், இனி ஐடி துறையில் பெரிய வீழ்ச்சிக் காலம் இருக்காது. வேகமான மீட்சிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது ஐடி துறை. 20 சதவீத வளர்ச்சியை இந்தத் துறை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஆண்டு 46.3 பில்லியன் அளவுக்கு ஐடி துறை வருவாய் ஈட்டியுள்ளது. அடுத்த காலாண்டில் இது 3 முதல் 4 சதவிகித அளவு உயரும் வாய்ப்புள்ளதாக நாஸ்காம் கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்.

சமீபத்தில் 24,000 பேரை பணிகளுக்காக தேர்வு செய்துள்ளோம். இவர்கள் அனைவருக்கும் நிச்சயம் வேலை தரப்படும் என்றார்.

இவர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்கெனவே பணி ஆணைகள் வழங்கப்பட்டுவிட்டனவாம். விரைவில் இரு தவணையாக மற்றவர்களுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டு விடுமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin