
தூத்துக்குடி மாநகராட்சி அந்தஸ்து பெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் 1986ம் ஆண்டு அக்டோபம் 20ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அதன்பிறகு சிதம்பரனார் மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
சுதந்திர போராட்டவீரர் வ.உ.சிதம்பரனார் தலைமையின் கீழ் செயல்பட்ட சுதேசி இயக்கத்தின் தென்னக தலைமையிடம் தூத்துக்குடி ஆகும். பின்னர் 1997ம் ஆண்டு மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியின் பெயரையே மாவட்டத்தின் பெயராகக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
2008 ஆகஸ்ட் 5ம் தேதி தமிழகத்தில் 10 வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. முதல் மேயராக கஸ்தூரிதங்கம் தமிழக முதல்வர் கருணாநிதியால் நிமிக்கப்பட்டார்.தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சியாக அந்தஸ்து பெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி அந்தஸ்து பெற்று ஒர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில்,வளர்ச்சிப் பணிகள் குறைவாகவே உள்ளது.
நன்றி : தூத்துக்குடி இனைதளம், சுப்ரமணியன், படம்:விவேகானந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக