ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

குற்றாலம் சாரல் விழாவில் படகுப் போட்டி:குற்றாலம் முதலிடம்


குற்றாலம் சாரல் விழாவின் நிறைவுநாளான நேற்று படகுப் போட்டி நடைபெற்றது.
குற்றாலம் - ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் நடைபெற்ற இப் போட்டி இருபிரிவாக நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டியில் இருவர் செல்லும் மிதிபடகில் இப் போட்டி நடைபெற்றது. இதில் 24 பேர் கலந்துகொண்டனர்.

போட்டியை குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் கொடியசைத்து தொடக்கிவைத்தார். குற்றாலம் கனகராஜ், அருண்ராஜ் ஆகியோர் முதலிடத்தையும், கண்ணன், மணி ஆகியோர் 2-ம் இடத்தையும், புதுக்கோட்டை கருணாநிதி, சரவணன் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

பெண்களுக்கான போட்டியை குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சித் துணைத் தலைவர் பா. ராமையா கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப் போட்டியில் 28 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் 4 பேர் செல்லும் மிதி படகில் கலந்துகொண்டனர்.


இப் போட்டியில் தென்காசி அருகேயுள்ள இலத்தூர் சுப்புலட்சுமி, பார்வதி, லட்சுமி, அழகம்மாள் ஆகியோர் அடங்கிய அணி முதலிடத்தையும், சங்கீதா, ராஜம்மாள், காளியம்மாள், மல்லிகா ஆகியோர் அடங்கிய அணி 2-ம் இடத்தையும், செங்கோட்டை சித்ரா, பேச்சியம்மாள், கலா, சுசிலா ஆகியோர் அடங்கிய அணி 3-ம் இடத்தையும் பெற்றனர்.

நிகழ்ச்சிக்கு சுற்றுலா அலுவலர் செல்லப்பா, மாவட்ட மக்கள் செய்திதொடர்பு அலுவலர் உல.இரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடுவர்களாக மாவட்ட நீச்சல் பயிற்றுநர் பிரேம்குமார், வசந்தகுமார் ஆகியோர் செயல்பட்டனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஹோட்டல் குற்றாலம் கிளை மேலாளர் கருப்பையா, செங்கோட்டை நூருல்உமல் டிரஸ்ட் குழுத் தலைவர் கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவிமக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் நன்றி கூறினார்.

அலெக்ஸ்,தென்காசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin