ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின் போது, தள்ளுபடி செய்யப்பட்ட சுயேட்சை வேட்பாளரின் மனு மறுபரிசீலனையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியை சேர்ந்த சுப்பையா மகன் ராஜா(33) என்பவரின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தள்ளுபடிக்கான காரணத்தில், ராஜாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 197 என்பதனை 174 என்று குறிப்பிட்டு இருந்தாக காட்டப்பட்டு இருந்தது
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் அனைவரையும் வரவழைக்கப்பட்டு, அவர்களின் முன்னிலையில் ராஜாவின் வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்பட்டது. அதில், மாநில தேர்தல் ஆணையர் வழிகாட்டுதலின்படி, ராஜாவின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக