ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 87 கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீர் இணைப்பு இல்லை.
இக்கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, இத்தொகுதி எம்.எல்.ஏ. சுடலையாண்டி தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நேரில் மனு கொடுத்தார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.பி. சுடலையாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக வியாழக்கிழமை சென்னையில் பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உள்பட்ட தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஒன்றியங்களில் 87 கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீர் இணைப்பு இல்லை.
இந்த கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட ஸ்டாலின், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக