வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

அறி(ரி)ய தகவல்.

ரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்!!


சக்கரை நோயாளிகள் ரம்ஜான் நோம்பு வைக்கலாமா என்று பொதுவாகப் பலரும் கேட்கிறார்கள்.

இஸ்லாமியரின் வாழ்வில் மிக முக்கியமான கடமையாக புனித ரமலான் நோம்பு கருதப்படுகிறது. ரமலான் நோம்பு வைக்கும் சக்கரை நோயாளிகள் பற்றிப் பார்ப்போம்.

நோம்புக் காலத்தில் பகலில் உணவு உட்கொள்ளாது மாலையில் சாப்பிடுகிறார்கள். மீண்டும் காலையில் உணவு உட்கொள்கிறார்கள்.

பகலில் உண்ணாநோன்பு இருக்கும்போது உடலுக்கு சக்தி எவ்வாறு கிடைக்கிறது? நாம் சாப்பிடும் உணவானது உடலின் சரக்கு அறை போல் செயல்படும் கல்லீரலில் கிளைக்கோஜன் என்ற பொருளாக சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் உடலில் கொழுப்பாகவும் சேர்த்துவைக்கப்பட்டுள்ளது. நோம்பு இருக்கும் காலத்தில் இந்த சேமிப்புகளில் இருந்து உடல் பெற்றுக்கொள்கிறது. உடல் கொழுப்புக்கள் கூட சக்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியளிக்கிறது.

சக்கரை அதிகம் உள்ளவர்களுக்கு நோம்பின்போது உடலில் உள்ள சக்தி உபயோகப் படுத்தப்படுகிறது. உடலில் சேமித்து உள்ள கொழுப்புகளும் குறைகிறது.

1. நீண்ட நேரம் வேலை செய்யும் சக்கரை குறைப்பு மாத்திரைகள் நோம்பு நேரத்தில் சக்கரையை மிகவும் குறைத்துவிடுவதால் உண்ணக்கூடாது.

2.இன்சுலின்களும் சக்கரையை மிகவும் குறைத்துவிடும்.

3.குறைந்த நேரம் செயல்படும் புதிய வகை மத்திரைகள் உபயோகிக்கலாம்.

4.சக்கரை அதிகமானால் மட்டுமே செயல்படும் மாத்திரைகளை உபயோகிக்கலாம்.

5.சாப்பிட்டவுடன் அதிகமாகும் சக்கரையைக் குறைக்கும் இன்சுலின்கள் உபயோகிக்கலாம்.

மாத்திரைகள்:

இந்த வகையில் சிடாகிளிப்டின், நேடிகிளினைட்,ரிபாகிளினைட் ஆகிய மாத்திரைகள் இந்த வகையில் வருகின்றன.

இன்சுலின்கள்:


அபிட்ரா, லிச்ப்ரொ, அஸ்பார்ட் ஆகிய இன்சுலின்கள் இதற்கு உதவும்.

மேலும் தகுந்த மருத்துவரிடம் உடல் பரிசோதனை, உணவுமுறைகள் பற்றிய ஆலோசனை பெற்று ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கலாம்.

நன்றி:தமிழ்த்துளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin