ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009
சட்டசபை இடைத் தேர்தல் - 67 வேட்பாளர்கள் போட்டி
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் 67 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.
இளையாங்குடி, கம்பம், பர்கூர், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக 120 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனைக்குப் பின்னர் மனுக்களை வாபஸ் பெற நேற்று வரை அவகாசம் தரப்பட்டிருந்தது.
நேற்று மாலை அவகாசம் முடிந்த பின்னர் மொத்தம் 67 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதிகபட்சமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், கம்பத்தில் 15 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 12 பேரும், பர்கூர், இளையாங்குடியில் தலா 9 பேரும் போட்டியிடுகின்றனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வேட்பாளர்கள் விவரம்..
பர்கூர்: கே.ஆர்.கே.நரசிம்மன் (திமுக), எஸ்.கண்ணு (சிபிஐ), கே.அசோகன் (பா.ஜ.க) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மகேஸ்வரி, டாக்டர் பத்மராஜன், கே.சக்திவேல், ஈ.ராஜேஷ், வி.சந்திரன், எஸ்.இளங்கோ.
தொண்டாமுத்தூர்: எம்.என்.கந்தசாமி (காங்கிரஸ்), கே.தங்கவேலு (தேமுதிக), வி.பெருமாள் (மார்க்சிஸ்ட்), எம்.சின்னராஜு (பா.ஜ.க), ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (தேசியவாத காங்கிரஸ்), ஆர்.சக்திவேல் (ஐக்கிய ஜனதா தளம்), என்.சிவக்குமார் (உழைப்பாளி மக்கள் கட்சி), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்), வி.செந்தில்குமார்(அகில பாரத் இந்து மகாசபை) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஏ.நூர்முகமது, ஆர்.சண்முகம், பி.கிருஷ்ணகுமார், ஆர்.கே.மணி, ஜி.ராமசாமி, எம்.மன்மதன், சி.குமரேசன், ஏ.சஞ்ஜய் காந்தி, சி.கதிரேசன், எஸ்.நாச்சிமுத்து, கே.ரத்தினசாமி, டாக்டர் இந்திரலேகா முத்துசாமி, ஜே.பிரேம்ஆனந்த்.
கம்பம்: என்.ராமகிருஷ்ணன் (திமுக), ஆர்.அருண்குமார் (தேமுதிக), எம்.சசிக்குமார் (பா.ஜ.க), கே.ராஜப்பன் (மார்க்சிஸ்ட்), ஜி.ராம்ராஜ் (உழைப்பாளி மக்கள் கட்சி) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் நாகமணி செந்தில், கே.நாசர், எம்.சுபாஷ்பாபு, கே.எஸ்.என்.மணி, கே.குருவேஸ்வரி, எஸ்.ராஜேந்திரன், ஜி.வெங்கடேசன், ஜி.சிவக்குமார், சி.பெரியஓச்சு, சதீஷ்.
இளையாங்குடி: எஸ்.மதியரசன் (திமுக), அழகு பாலகிருஷ்ணன் (தேமுதிக), பி.எம்.ராஜேந்திரன் (பா.ஜ.க), மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பி.நாகராஜன், எம்.பெரியய்யா, வி.தளபதி, ஆர்.காளிமுத்து, ஜி.சதீஷ், ஏ.அறிவழகன்.
ஸ்ரீவைகுண்டம்: எம்.வி.சுடலையாண்டி (காங்கிரஸ்), எம்.சவுந்தரபாண்டி (தேமுதிக), ஏ.சந்தானக்குமார் (பா.ஜ.க), ஜி.தனலட்சுமி (சிபிஐ) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் எம்.ராமசுப்பிரமணியன், எம்.ராமசுப்பிரமணியன், சி.மருதநாயகம், யு.நாகூர்மீரான் பீர்முகம்மது, எஸ்.ஆறுமுகராஜ், கிருஷ்ணகாந்தன், டி.அருணாச்சலம், எஸ்.முருகன். எஸ்.ராஜா.
திமுக பர்கூர், இளையாங்குடி, கம்பம் தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தேமுதிக, பாஜக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
சிபிஎம் தொண்டாமுத்தூர், கம்பம் தொகுதிகளிலும், சிபிஐ ஸ்ரீவைகுண்டம், பர்கூர் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக